Open Srirangam Temple 2nd Prakaram for Pradhakshanam
Srinivasan Kannan 0

Open Srirangam Temple 2nd Prakaram for Pradhakshanam

1453 people have signed this petition. Add your name now!
Srinivasan Kannan 0 Comments
1453 people have signed. Add your voice!
1%
Maxine K. signed just now
Adam B. signed just now

|| Sri: || Srimathe Ramanujaya Nama: ||


Shri Ranganatha Swamy Temple, Srirangam - Regarding fundamental rights to do Prathakshina/Parikrama in the 2nd Prakara called "Rajamahendran Thiruchutru"


For English Scroll Down

|| ஶ்ரீ: || ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ||

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் உள்ள ராஜமஹேந்திரன் திருச்சுற்று என்று கூறப்படும் இரண்டாம் ப்ராகாரத்தினைப் ப்ரதக்ஷணம் செய்யும் அடிப்படை உரிமை குறித்து.

பல நூற்றாண்டுகளாக ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி கோவிலில், உள்ள இரண்டாம் ப்ராகாரத்தில் பெரிய பெருமாளை சுற்றி ப்ரதக்ஷணம் செய்து கொண்டு இருந்தோம். இப்படி ப்ரதக்ஷணம் செய்வது ஒரு முக்கியமான ஸம்ப்ரதாய சடங்கு மட்டுமல்லாமல், இப்படி ப்ரதக்ஷணம் செய்து ஸ்ரீரங்க விமானத்தை தரிசனம் செய்வதே ஸ்ரீரங்கநாதனை தரிசிப்பதற்குச் சமமும் அதற்கு மேலும் என்ற கருத்தை உடையவர்களாய் இன்றுவரை உள்ளோம்.

மேலும் இந்த ப்ராகாரத்தில், ஸ்வாமி நம்பிள்ளை ஈடு காலக்ஷேபம் செய்த இடமும், ஸ்வாமி மணவாளமாமுனிகள் ஈடு காலக்ஷேபம் செய்த இடமும், ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் நடந்த இடமும், துலுக்க நாச்சியார், சேரகுலவல்லித் தாயார் மற்றும் க்ருஷ்ணர் சன்னதிகளும் உள்ளன.

ஸ்வாமி ராமானுஜர், ஆத்மாக்களுக்குள் பேதம் இல்லை என்ற ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் உயர்ந்த கொள்கையை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் துலுக்க நாச்சியார் சன்னதியை இந்த இரண்டாம் ப்ராகாரமாகிய ராஜமஹேந்திரன் திருச்சுற்றில் ஸ்தாபித்தார். துலுக்க நாச்சியார் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர் என்பது தெரிந்ததே! இந்த ப்ராகாரத்தில் தான் ஏகாதசி முதலிய திதிகளில் நம்பெருமாளுக்கு திருமஞ்சனமும் நடைபெறுகிறது. அர்ஜுன மண்டபம், சந்தனு மண்டபம், கண்ணாடி அறை, மற்றும் எம்பெருமானின் பல்வேறு அறைகளும் இந்த ப்ராகாரத்தில்தான் உள்ளது.

கர்பூர படியேற்றத்தை சேவிக்க வந்த விஜயரங்க சொக்கநாதர் என்கிற ராஜாவின் உருவத்தையும் அவரின் குடும்பத்தினரின் உருவங்களையும் உடைய இந்தப் ப்ராகாரம், எம்பெருமானின் தரிசனத்தின் உயர்த்தியைக் காட்டும் வண்ணம் அமைந்துள்ளது.

இவ்வளவு மகத்துவம் வாய்ந்த இந்தப் ப்ராகாரத்தை ப்ரதக்ஷணம் செய்வது எங்கள் அடிப்படை உரிமையாதலால், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் தடைகளை உடனே விலக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

--- English Version

For many centuries we were doing Prathakshina/Parikrama on the 2nd Prakara of Shri Ranganatha Swamy Temple, Srirangam. To do so is not just a very important religious activity but is considered to do Prathakshina/Parikrama and have Darshan of the "Thanga Vimana" (Golden Vimana) is itself considered as having Darshan of Shri Ranganatha Swamy himself and even more than that.

Also, in this Prakara, are important places where Swami Nambillai had discoursed "Eedu Kalakshebam" (Thiruvaimozhi vyakyanam/commentary), the place where Swami Manavalamaamuniagal discoursed "Eedu" Kalakshebam, Shri Bhasya Kalakshebam, The sannidhis of Thuluka Nachiyar/Biwi Nachiyar, Serakulavalli Thayar and Krishnar Sannidhi.

Swami Ramanuja, who's philosophy loudly stated that there is no discrimination between Athmas had consecrated Thulukka Nachiyar's sannidhi in this Prakara. We all know that Thuluka Nachiyar was a Muslim. Only in this Prakara Thirumanjanam (Abhishekam) happens on important Thithis (Days) like Ekadasi. Also located in this Prakara are Arjuna Mandapa, Sandhanu Mandapa and Kannadi Arai (Room of mirrors)

Showcasing the greatness of having Darshan of Shri Namperumal, the idols of the king Vijayaranga Chokkanadhar and his family is situated in this Prakara as well.

To do Prathakshina/Parikrama of this Prakara which has so many greatness is our FUNDAMENTAL RIGHT and we therefore request you to remove the blockades immediately.

Share for Success

Comment

1453

Signatures